• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

‘டிட்வா புயல்’ காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை..,

ByM.I.MOHAMMED FAROOK

Nov 29, 2025

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடங்கிய தொடர் மழை இன்று அதிகாலை வரை பெய்து வருகிறது.
காரைக்கால் நகர பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது