• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இசைக் கடவுள் இளையராஜா தலைவர் ரஜினி மட்டுமே-தனுஷ் பேட்டி

நடிகர்தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே இந்தி படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் நாளையொட்டி வெளியாகவுள்ளது.

படத்தின் விளம்பரநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில்கூறியபோது எனக்கு மிகவும் பிடித்தது இளையாராஜாவின் இசை. இளையராஜா என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே.இந்த படத்தின் ஹீரோயின் சாரா அலி கான் என்னை தலைவா என்று அழைத்தார் தலைவர் ஒருவர் மட்டுமே. அது ரஜினிதான். என்னை அப்படி கூப்பிட வேண்டாம் அதனை ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாராவிடம் லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதன் இயக்குநருக்கே கிடைக்கும். எனவே நான் ஒரு இயக்குநராக தொடர விரும்புகிறேன்என்று இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.