புதுக்கோட்டை மாவட்ட பழைய பேருந்து நிலைய அருகாமையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அளவில் வாகன பிரச்சார இயக்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதி படி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலர்கள் உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்களை கலந்துகொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை காரணம் காட்டி 2010 முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்ததில் இருந்து tet தேர்வில் இருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராக மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒன்றிய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்படும் வரும் அநீதியை களையப்பட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற பத்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







; ?>)
; ?>)
; ?>)