• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

க.இளம்பகவத் தலைமையில்மக்கள் குறை களையும் நாள்..,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில்  மக்கள் குறை களையும் நாள் கூட்டம்  நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து, மக்கள் குறை களையும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் 1 அலுவலக உதவியாளர் மற்றும் 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டார். அரசு அதிகாரிகள் தினறியபோய் உள்ளதாகவும். எனவும். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மத்தியில் தகவல்கள் தெரிவிக்கின்றன!