விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கந்த சஷ்டி வேல் பூஜை சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இராஜபாளையம் பழையபாளையம் காமாட்சியம்மன் கோவில் தெரு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி வேல் பூஜைக்கு சங்கர் தலைமை வகித்தார். விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் ஆனந்த், நகர செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வேல் பூஜையில் சிறப்பு அழைப்பாளராக வீரவநல்லூர் குலசேகர மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராம ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு வேலுக்கு அபிஷேகங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் பெண்கள், ஆண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து பாட்டுப்பாடி பூஜை நடத்தினர்.














; ?>)
; ?>)
; ?>)