• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..,

ByK Kaliraj

Oct 25, 2025

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரம் ஆகும். பருவமழையின் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வறுத்து இருந்ததால் அணை 10 மாதங்களுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது.

21 அடி உயரமாக நீர்மட்டம் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி முதலாவது மதகு வழியாக 600 கன அடி நீர் வைப்பாற்றில் இரண்டு நாட்கள் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால் நீர் வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.