• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜெயவர்தனே

Byமதி

Dec 13, 2021

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மகிளா ஜெயவர்தனே. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வலது கை பேட்ஸ் மேன். டெஸ்ட் போட்டிகளில் 5826 ரன்களை எடுத்து சாதனை புரிந்தவர், ஒரு நாள் போட்டியில் 10000 மேல் ரன்களையும் குவித்துள்ளார். மேலும் இலங்கை அணியின் தலைசிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அவர் அந்த பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொறுப்பை அடுத்த ஒரு ஆண்டுக்கு ஜெயவர்தனே கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன், இந்த தேர்வு பட்டியலில் ஜெயவர்தனே பெயரும் இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.