விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் நாடார் மகாஜன சங்கம், ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி,
திமுகவிற்கும் , தவெகவிற்கு 2 வது இடத்திற்கு தான் போட்டி….

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமர்வது உறுதி. டிசம்பர் மாதத்திற்கு பின்பு ஒரு அலை உருவாகும் எடப்பாடி பழனிச்சாமி பின்பு மக்கள் திரள்வார்கள்.
களத்தில் அதிமுக வை எதிர்க்கின்ற சக்தி யாருக்கும் கிடையாது. பிரச்சனை என்று சொன்னால் வீதிக்கு வந்து போராடக்கூடிய போர்க்களம் படைத்தவர்கள் அதிமுக தொண்டர்கள்.
தேர்தல் யுத்த களத்தில் வெற்றியை நோக்கி அதிமுக சென்று கொண்டிருக்கிறது.
அதிமுக கூட்டணிக்கு வழி சேர்க்கும் விதமாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பாதயாத்திரை செல்வதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் இது வரவேற்கத்தக்கது.
திமுக செய்யக்கூடிய அனைத்து சதிகளையும் முறியடித்து எடப்பாடி பழனிச்சாமி துருவ நட்சத்திரமாக அரசியல் வானில் ஜொலிப்பார் தமிழ்நாட்டு மக்கள் விரும்பக்கூடிய நல்லாட்சி தருவார்.
ஓபிஎஸ் , டிடிவி இணைப்பு சம்பந்தமாக எந்த முடவாக இருந்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் எடுப்பார்.
அதிகாரம் கண்ணை மறைக்கின்ற வார்த்தைகளை விடுகின்றஇன்றைய திமுக தலைவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக படிப்பினையாக அமையும்.
விஜயகாந்த் தேமுதிக ஆரம்பிக்கும் பொழுது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் மிகப்பெரிய கூட்டம். விஜயகாந்த்துக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள் ஆனால் விஜய்க்கு பக்குபோட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை.
விஜய்க்கு என்று ஒரு கூட்டம் கூடுகிறது ஆனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
விஜய்கு கூடும் கூட்டத்தை விட தல அஜித் வந்தால் இரண்டு மடங்கு கூட்டம் கூடும்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கூடாத கூட்டமா ஏர்போர்ட்டில் வந்து ரஜினி நின்றால் 5 லட்சம் பேர் கூடுவார்கள்.ரஜினிக்கு இன்றும் அந்த மாஸ் இருக்கிறது.திரை நட்சத்திரங்கள் நேரில் எப்படி இருக்கிறார்கள் என்று நாங்களே பார்ப்போம்.
விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் நடைபெறாத ஆசை.அவர் முயற்சி எல்லாம் வீணாகும்.
விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் தலைமையில் இருக்கின்ற அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் இந்த தேர்தலோடு விஜயை தி.மு.க முடித்து விடும்.விஜய் அவர்கள் நன்றாக யோசித்து அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும்.
விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், திமுக ஆட்சியை தூக்கி எறிவேன் என்று விஜய் சொல்வது உண்மையாக இருந்தால் அவர் அதிமுக கூட்டணியைத்தான் நாடி வரவேண்டும் அதுதான் விஜய்க்கு சரியான முடிவு.
விஜய் தனித்து நின்று களம் காண்போம் என்று கூறுவது திமுகவிற்கு வழு சேர்க்கும் விதமாகத்தான் தமிழக மக்கள் பார்ப்பார்கள்.அந்த நேரத்தில் திமுகவிற்கு மாற்றாக அதிமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.ஸ்டாலினுக்கு மாற்றாக எடப்பாடி பழனிச்சாமியை தான் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலலில் நடக்கும்..