• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..,

2026 இல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலினா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்கள் என்று மக்களிடம் கேட்டால் எடப்பாடியார் என்று மக்கள் உறுதியாக உள்ளனர் என்று விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் பேசினார்.

சாத்தூர் அருகே உப்புத்துரில் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூரில் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் வருகின்ற2026 இல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலினா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர்களா என்று மக்களிடம் கேட்டால் எடப்பாடி யார் அவர்களே என்று மக்கள் உறுதியாக உள்ளனர் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து நாமும் உழைத்தால் வருகின்ற 2026 இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சர் ஆவது உறுதி என்று .
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் பேசினார்

இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் எம் எஸ் ஆர் ராஜாராமன் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் மற்றும் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்