விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலையம் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வ.உ.சி பேரவை மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பாண்டியராஜா தலைமையில் மலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் பிச்சை கனி, மற்றும் வ.உ.சி பேரவை நிர்வாகிகள், பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, விசிக நகர செயலாளர் இளந்தமிழ், இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார், உட்பட சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. .














; ?>)
; ?>)
; ?>)