விருதுநகர் நகராட்சி மூலம் நகர் புறத்தில் தூய்மைசெய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையில்லை. அவர்களுக்கு வழங்க வேண்டிய கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கவில்லை.

மேலும் குப்பைகளை அள்ளிச்செல்லும் வாகனங்களில் வலை போட்டு மூடிச்செல்லாத நிலையில் செல்லும் வழியில் குப்பைகள் அங்காங்கே சிதறி கீழே விழுந்து விடுகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் நகரின் தூய்மை, மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.