• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..,

ByPrabhu Sekar

Aug 11, 2025

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு 7:15 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் வழக்கம்போல் டெல்லி புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 8:17 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் சுமார் 150 பயணிகள் டெல்லி பயணம் செய்தனர். அதில் காங்கிரஸ் எம்பிகள ஐந்து பேரும் இந்த விமானத்தில் டெல்லி பயணம் செய்து உள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 10 மணியளவில் அந்த விமானம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லை வான் பரப்பில் பறந்து கொண்டு இருந்தது.

அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் விமானத்தை தரையிருக்க முடிவு செய்து விமானி இது குறித்து தகவலை திருவனந்தபுரம் மற்றும் டெல்லியில் உள்ள விமானம் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அரை அதிகாரிகள் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக இந்த விமானம் தரையிறக்குவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைத்தனர். இதையடுத்து விமான பொறியாளர் குழுவினர் விமானத்திற்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்ட பழுதை உடனடியாக நீக்க முடியாததால் எம் பிகள் உட்பட 150 பயணிகளையும் மாற்று விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஒரு மணி அளவில் ஏர் இந்தியா பயணிகள் மாற்று விமானத்தில் 150 பயணிகளும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள டி ஜி சி ஏ எனப்படும் டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியசன் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடிரென ஏற்பட்ட இயந்திர கோளாறால் சென்னையில் அவசரமாக தரையிறக்கி மாற்று விமான மூலம் பயணிகள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.