கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு துணை முதலமைச்சர் தஉதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” மாபெரும் பொதுக்கூட்டம் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் அவர்கள் தலைமையில் நாகர்கோவில் செம்மாங்குடி சாலையில் நடைப்பெற்றது.

பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் கழக அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் வீடு வீடாக கொண்டு சேர்த்தல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை பற்றியும் குமரி மாவட்டத்தில் கழக அரசின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக திருக்கோயில்களுக்கு பல கோடி ரூபாயில் நடைப்பெற்று வரும் திருப்பணிகளை பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.

உடன் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மண்டலத்தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.