• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்…

ByRadhakrishnan Thangaraj

Jun 22, 2025

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து த.வெ.க நிர்வாகிகள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு எடை போடும் இயந்திரம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.

இதை அடுத்து இராஜபாளையம் அய்னார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அந்த மக்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் மழை வாழ் மக்களுக்கு தேவையான பாத்திரங்கள், குழந்தைகளுக்கு நோட்புக் பேனா போன்றவற்றை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட துணை தலைவர் டாக்டர் யமுனா தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் சமீர், கழக நிர்வாகி சிவக்குமார், முன்னிலையில் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் ஏ. ஆர். ரவிபாலாஜி, தீவான், சரவணன் மற்றும் பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு காந்த சிலை ரவுன்டானவில் இனிப்புகளும் வழங்கி விஜய் பிறந்தநாளை கொண்டாடினர்.