
இராஜபாளையம் குமராண்டிசுவாமி கோவில் ஆனி முப்பழ பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அமைந்துள்ள குமராண்டி சுவாமி கோவிலில் ஆனி முப்பழ பூஜையை முன்னிட்டு, மாலையில் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முப்பழ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முப்பழ பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
