சர்வதேச யோகா தினம் இன்று கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வகை யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி விஷ்வ சாந்தி மேல்நிலை பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வகையான ஆசனங்களை செய்து அசத்தினர். மேலும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினம்தோறும் யோகா பயிற்சிகள் கொண்டு வருவதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.