புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கீழ வாண்டான் விடுதி பகுதியை என்ற சேர்ந்த விவசாயி தங்கவேல் சிகப்பாயி இவர்களுக்கு ராஜாத்தி,ராஜாம்பாள், ரேவதி, சரஸ்வதி, கோமதி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஐந்து பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார் இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தங்கவேல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டி அழகு பார்க்கும் இந்த காலத்தில் தந்தை மீதான அளவற்ற பாசத்தால் மகள்கள் கோயில் கட்டி குரு பூஜை நடத்தி அப்பகுதி கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்பூவுலகில் இருந்து தங்கவேல் மறைந்தாலும் இன்றளவும் உயிருடன் வாழ்ந்து வருவதாக மகள்கள் ஐந்து பேரும் தெரிவித்தனர்.