கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு நாடார் மடம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம். கன்னியாகுமரி நாடார் மடம் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் சங்க செயலாளர் தர்மலிங்கம் உடையார், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ்,தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்
அக்க்ஷயா கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.