• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு மாரியம்மன் பொங்கல் விழா..,

ByRadhakrishnan Thangaraj

May 20, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் மற்றும் அருள்மிகு முனியாண்டி திருக்கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது இன்று 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் வீதி உலாவாக சென்றனர் அனைத்து தொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் திரவிய பொடி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு அம்மனும் முனியாண்டி சுவாமியும் பக்தர்களுக்கு அருள்பாவித்தனர்.

விழா ஏற்பாடுகளை ஆர் ஆர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.