

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (20.05.2025) தலைமைச் செயலகத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசீலன் அவர்கள் சந்தித்து, முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு இந்திய அரசின் நிதி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது மற்றும் 3 கோடி ரூபாய் பரிசு தொகையை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அருகில் உள்ளார்.


