• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

492 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வாழ்த்து..,

ByM.JEEVANANTHAM

May 16, 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,149 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் இதில் மாணவர்கள் 91.60% மாணவிகள் 96.17% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 93.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டு விட மூன்று சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் மாநில அளவில் 23ஆம் இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பிடித்துள்ளது. இதே போல அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 4,485 மாணவ மாணவிகளில் 4009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 அரசு பள்ளிகளில் 18 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய தர்ஷினி என்ற மாணவி 492 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் முதலிடம் எடுத்துள்ளார். இவரது தந்தை ஜோதி ராமன் என்பவர் தினக்கூலி அடிப்படையில் டைல்ஸ் போடும் வேலை செய்து வருகிறார். இன்று முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் கல்வி கற்பித்த ஆசிரியர் கட்டி அணைத்து வாழ்த்துக் கூறிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு பள்ளிகள் படித்தாலும் தனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாணவி தர்ஷினி தெரிவித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.