• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

அவசர ஊர்தி கிடைக்காததால் உயிரிழந்த நோயாளி..,

ByM.JEEVANANTHAM

May 16, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கீழராதாமூர் கிராமத்தை சார்ந்த மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கணவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துள்ள நிலையில் மகன் அஜய் 14 வயது மகள் அருன் பிரியா 12 வயது நிரம்பியவர்கள் உடன் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி வயிற்றுப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் அவசர ஊர்திக்காக காத்திருந்துள்ளனர்.

மதியம் 2 மணியிலிருந்து அவசர ஊர்தி கிடைக்காததால் இரவு 8 மணி வரையும் காத்திருந்தனர்.இந்த நிலையில் திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு பாக்கியலட்சுமி மருத்துவமனையிலேயே உயிரிழந்து உள்ளார். உடல்நிலை சரியாகிவிடும் என்று கடலூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த என்னுடைய அம்மா தற்போது வர மாட்டார் இனி வரமாட்டார் என்று மகன் அழுது கொண்டு என்னையும் உங்களுடன் கூட்டி செல்லுங்கள் என்று அழுத காட்சி அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதுகுறித்து மருத்துவமனையில் பிற நோயாளிகளை கவனிக்க வந்த பொதுமக்கள் செவிலியரிடம் கேட்டபோது எனக்கும் அதே நிலைமை தான் என்னுடைய கணவரும் இதே மருத்துவமனையில் இதே போல் தான் இறந்திருக்கிறார். இங்கு அப்படித்தான் நடக்கும் வேண்டுமென்றால் நீங்கள் சிஎம்ஓ விடும் முறையிடுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தது பொது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட மருத்துவமனை என்ற அங்கீகாரம் இல்லாமல் தேவைக்கு குறைவான மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையில் மருத்துவமனை இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.