• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம்

ByP.Thangapandi

May 15, 2025

உசிலம்பட்டி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் 1500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மத்திய அரசின் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ், குடிநீர் நீர்தேக்க தொட்டி அமைக்க கடந்த 2022-23 ஆம் ஆண்டு 40 லட்சம் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

கடந்த 4 மாதங்களுக்கு பணிகள் முடிவடைந்த நிலையில் நீர் தேக்க தொட்டியில் நீரை ஏற்றி தேக்கும் போது, அதிகப்படியான கசிவுகள் ஏற்பட்டதால் அவ்வப்போது சோதனைக்காக மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் பகுதிக்கு ஏறிய 4 சிறுவர்கள், சிறுநீர் கழிப்பது, குடிநீர் தொட்டிக்குள் இறங்கி குளிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் பிரச்சனையில் குடிநீர் நீர்தேக்க தொட்டியில் மலம் கழிந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், இதே போன்று உசிலம்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.