

திருப்பரங்குன்றத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குடோனில் தீ விபத்து. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பாம்பன் நகர் லட்சுமி தெருவில் முருகன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனின் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று நள்ளிரவு மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் லேசாக பற்றிய தீ மலம் அளந்து முழுவதுமாக பற்றி எரிய தொடங்கியது. நள்ளிரவு என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை.

தீயை கண்டு அக்கம், பக்கத்தினர் உடனடியாக மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆன தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
நள்ளிரவு நேரத்தில் பிளாஸ்டிக் பொருளில் தீ பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இது சம்பவ குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

