

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்களை போல், நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மதுரையை சேர்ந்த பிரபல நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் மாமன் திரைப்படம் நாளை வெளியாகிறது.
சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2 ,கொட்டு காளி,கருடன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி,ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்து நாளை வெளியாக உள்ள மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அவரது ரசிகர்கள் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பூமாலை, தேங்காய்,பழ தட்டுடன் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.


சாமி தரிசனம் செய்த பின்பு கோவில் வாசலில் அமர்ந்து அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் நாளை திரையிட உள்ள மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்தனை செய்து மண் சோறு சாப்பிட்டதாகவும் .அடுத்தடுத்து வரக்கூடிய திரைப்படங்கள் வெற்றி பெற தொடர்ந்து இறைவனை வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.


