• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க. சார்பில்,முதியோர் இல்லங்களில் அன்னதானம்..,

ByVasanth Siddharthan

May 12, 2025

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பழனியில் உள்ள முதியோர் இல்லங்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் நலத்துடன் வாழ வேண்டி அதிமுக கழக சார்பில் தமிழக முழுவதும் அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பழனி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் பண்ணாடி ராஜா மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர் தீன் ஏற்பாட்டின் பேரில் முதியோர் இல்லங்களில் 500க்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் ரவிமனோகரன், நகர கழக செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்எல்ஏ குப்புசாமி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் பால சமுத்திரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.