

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (49). இவர் தினமும் நத்தத்திலிருந்து கோபால்பட்டி, சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு மினி வேன் மூலம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நத்தத்திலிருந்து சாணார்பட்டி மற்றும் அஞ்சுகுழிபட்டியில் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்த பிறகு மீண்டும் கோபால்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரம் என்பதால் சாலை தடுப்பில் போதிய எச்சரிக்கை மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் கோபால்பட்டி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முன் உள்ள சாலை தடுப்பில் பால்வேன் பலமாக மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் ஜார்ஜ் சிறு காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சாலைதடுப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சாலை தடுப்பை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

