• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒர்க்ஷாப்பில் தீ விபத்து… சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..,

கம்பத்தில் பழைய கார் உடைக்கும் ஒர்க்ஷாப்பில் நடைபெற்ற தீ விபத்தில், சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் மணிநகரம் கமராஜர் தெருவைச் சேர்ந்த முருகன்(60). இவர் அதே பகுதியில் பழைய கார்களை உடைத்து உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஒர்க்ஷாப்பில் அவரது மகன் ராஜ்குமார் உடன் தொழிலாளர்கள் கார்களை உடைத்து கொண்டிருந்த போது, ஒர்க்ஷாப் நுழைவு பகுதியில் இருந்த கழிவுகளில் இருந்து தீ பற்றியுள்ளது. இந்த தீ எதிர்பாராத விதமாக மள, மள என பரவியது. இதில் ஒர்க்ஷாப்பில் வைத்திருந்த நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடனே இது குறித்து தகவலறிந்த கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரு 1 லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எறிந்து நாசமாகின. இது குறித்து கம்பம் தெற்கு சப்இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சம்பவ பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.