• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தேனி தெற்குமாவட்டம் கம்பம் வடக்கு நகர திமுக சார்பாக, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கம்பம் ஏஎம் சர்ச் தெருவில் நடைபெற்றது. கம்பம் வடக்கு நகர செயலாளர் எம்.சி வீரபாண்டியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், நகரத் துணைச் செயலாளர் கராத்தே ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

நகர அவை தலைவர் அப்துல் ரஹீம், பொருளாளர் சோமசுந்தரம், மாவட்ட பிரதிநிதி சரவணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன், கம்பம் தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா பேசினர். தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, திமுக தலைமை கழக பேச்சாளர் வாசு சா. முத்துசாமி சிறப்புரையாற்றினர். எம்எல்ஏ ராமகிருஷ்ணன் பேசுகையில்.., தமிழக அரசின் நான்காண்டு சாதனையான, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இளைஞர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் வறுமை இல்லை, பட்டினிச் சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய சாதி மோதல்கள் இல்லை, மதக் கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை என பேசினார். நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திமுகவினர்கள் கலந்து கொண்டனர்.