• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி

Byவிஷா

May 8, 2025

சித்ரா பௌர்ணமி தினமான மே 12 அன்று குமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாவதைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் சூரியன் மறைவதையும், அதே நேரத்தில் கிழக்கே வங்கக் கடல் பகுதியில் பூரண சந்திரன் உதயமாவதையும் காணலாம்.
இந்நிகழ்வைக் காண்பதற்காக வரும் 12-ம் தேதி மாலையில் குமரி முக்கடல் சங்கம கடற்கரை, சூரிய அஸ்தமன மையம், முருகன் குன்றம் மலை மற்றும் தனியார் லாட்ஜ்களின் மொட்டைமாடி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் திரள்வார்கள் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.