• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு தாணுமாலய சுவாமி திருவிழா..,

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த(ஏப்ரல்_24)ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று (மே-6)ம் தேதி,9_ம் திருவிழா இன்று காலை.6.00 மணிக்கு சிறிய இந்திர வாகனத்தில் மஹாவிஷ்ணு அம்பாள் திருவீதி உலாவுக்கு பின் காலை 9_மணிக்கு
திருத்தேர் வடம் தொட்டிழுத்தல் தொடங்கியது.

குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசீதரன் நாயர், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார்.

திருத்தேர் வடம் பிடித்து தொடங்கியதும்,கோவிலின் பிரதான கிழக்கு வாசல் முழுவதும் மூடப்பட்டது. தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி தேர் நிலைக்கு வந்த பின்புதான் அடைக்கப்பட்ட கோவில் கதவு மீண்டும் திறக்கப்பட்டும்.

சித்திரைப் பெருந்திருவிழா வின் சிறப்பு நிகழ்வான”தெப்பத்” திருவிழா நாளை இரவு (மே7)ம் தேதி 8மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.