• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மனித நேயம், மனித கடத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி.

ByP.Thangapandi

Mar 15, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புனித வளனார் சமூக பணி மையத்தின் திட்ட இயக்குநர் லூசியா முன்னிலையில் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் எஸ்ஓஆர் தங்கபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த பேரணியானது தொட்டப்பநாயக்கனூர் விலக்கிலிருந்து தொடங்கி இ.புதுப்பட்டியில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக சென்று பொதுமக்களிடம் மனித கடத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, சிறுமி திருமணத்தை தடுப்பது மற்றும் மனித நேயத்தை பாதுகாப்பது குறித்து கையில் பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக மனிதநேயம் காப்பது குறித்தும், மனித கடத்தல் குறித்தும் கருத்தருங்கு கூட்டம் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பது, மனித நேயம் காப்பது குறித்து உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. மனிதர்கள் கடத்தபடுவது, பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தப்படுவது, பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது, குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து மகளிர் சுயஉதவி குழு பெண்கள் நாடகம் மூலம் நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.