



அரசியல் டுடே டாட் காம் செய்தி எதிரொலி
சோழவந்தான் அருகே மேலக்காலில் தாழ்வாக சென்ற மின்வயர்கள்ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்வான பகுதிகளுக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து அரசியல் டுடே டாட் காம் செய்தி கடந்த வியாழக்கிழமை வெளிவந்திருந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த கீழமாத்தூர் மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக சென்ற மின் வயர்களை உடனடியாக அப்புறப்படுத்தி உயர்வானபகுதியில் மாற்றி அமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்ஒரு வருடத்திற்கு மேலாக மின் வயர்கள் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக சென்று வருகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோரிடத்தில் தொடர்ந்து முறையிட்டோம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது அரசியல் டுடே டாட் காம் செய்தி வெளிவந்தவுடன் உடனடியாக ஒரே நாளில் அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த அரசியல் டுடே டாட் காம் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு கூறினர்

