காவல்துறைக்கு கவால்துறை, ஜாதிமோதலுக்கு பதிலா ஜாதிமொதல என்று மாறி, மாறி விருதுநர் மேற்கு மாவட்ட அதிமுக போஸ்டர் யுத்தத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் தலை உருளப் போவது நிச்சயம் என அதிமுகவின் தலைமைக்கழக நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து விருதுநர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.
அண்ணன் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு முன்னால, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்லாம் தாக்கு பிடிக்க முடியுமா? தேவையில்லாம தேவர், நாடார் சமுதாயத்தை அவருக்கு எதிராக கிளப்பி விடுறேன்ற பேருல இப்ப அசிங்கபட்டது மட்டும்தான் மிச்சம். விருதுநகர் மாவட்டத்தைப் பொருத்த அளவுல, அதிமுகவுல அதுவும் விருதுநகர் தொகுதியில சாதாரண தொண்டன்ல இருந்து மாவட்ட நிர்வாகிகள் யாருமே அவரை ஏத்துக்கல. அவரு தனியா இங்க வந்து தான்தோன்றித்தனமா அரசியல் செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஏன் எங்க விருதுநகர்ல நாடார் சமுதாயத்தில அதிமுகவுல பெரிய ஆளே இல்லையா?

அவங்கள்லாம் அண்ணன் எடப்பாடிக்கும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் மரியாதை கொடுக்கிறவங்க. மாஃபா பாண்டியராஜனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியல. விருதுநகர் தொகுதியில இருக்கக் கூடிய தொண்டன அனுசரிச்சு போகவும் தெரியல. இவருக்கு என்ன தெரியுது கட்சியின் புரொட்டாகால். ஒரு ஏரியாவுக்கு போறாருன்னா அந்தப் பகுதி செயலாளருகிட்ட சொல்லணும். அந்தப் பகுதி செயலாளர் போனை எடுக்கலன்னா, நகரச் செயலாளருகிட்ட சொல்லணும். நகரச் செயலாளர் ஒத்துக்கலன்னா ஒன்றியச் செயலாளர்கிட்ட சொல்லணும். அப்படி இல்லன்னா அவைத்தலைவர்கிட்டயும், மாவட்டச் செயலாளருகிட்டயும் சொல்லணும். இந்த விதிகளையே மதிக்கத் தெரியாதவர்தான் மாஃபா பாண்டியராஜன். அவரா நலத்திட்ட உதவிங்கிற பெயருல பெரிய கூத்தே நடத்துவாரு. நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? சாதாரண சின்ன பிரச்னையை பெரிசா ஜாதி அரசியலாக்கி போஸ்டர் யுத்தத்தை தொடங்கிட்டாரு. காவல்துறையை கவால்துறைன்னு அடிக்கிறாரு. எங்க பக்கமும் தப்புத் தப்பா போஸ்டர் அடிக்கிறாங்க. இதயும் நாங்க நியாயப்படுத்தல.

இப்படி ஒரு எழுத்துப் பிழை: ஜாதிமோதல்னு பதிவிடறதுக்கு பதிலா, ஜாதிமொதலன்னு இப்படி பதிவிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!
ஜாதிமோதல்னு போடுறதுக்கு பதிலா, ஜாதிமொதலன்னு போட்டுருக்காங்க. ஆக, மொத்தத்துல தமிழ அசிங்கபடுத்துறாங்க. இதெல்லாம் எதிர்க்கட்சி அரசியல் பண்றதுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி இல்லையா. இது ஒருபக்கம் இருக்கட்டும். எங்களுக்குத் தேவை மாஃ.பா பாண்டியராஜன் அரசியல் பண்ணக்கூடாது. அப்படியே அரசியல் பண்ணாலும், அண்ணன் கே.டி.ராஜேந்திரபாலாஜிகிட்ட அனுமதி கேட்டு அரசியல் பண்ணனும். இவரு மேல நாங்க வருத்தத்துல இருக்கோம். போஸ்டர் யுத்தத்துல இவரு தலை உருளப் போவது நிச்சயம்னு தலைமைக்கழகத்துல சொல்றாங்க என்றனர் விருதுநகர் தொகுதியில் உள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகளும்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை மீண்டும்,மீண்டும் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை மறுக்கவே அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்..,

எங்க சைடு காவல்துறைய கவால்துறைன்னு அடிச்சது உண்மைதான். அவங்க சைடு ஜாதிமோதல்னு அடிக்கிறதுக்கு ஜாதிமொதலனு அடிச்சிருக்காங்க. இதையெல்லாம் நாங்க என்ன சொல்ல என்றனர் வேகமாக.

மாஃபா பாண்டியராஜன்
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள விருதுநகர் தொகுதியில் நிர்வாகிகள் ஒன்று திரண்டதால் மாஃபா பாண்டியராஜனின் நிலை இனி படுமோசம்தான்!
வீடியோக்கள், படங்கள், தொகுப்பு; காளிராஜ், சிங்கராஜ்