• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டிச.6ல் இந்தியா வருகை தரும் ரஷ்ய அதிபர் புதின்..!

Byவிஷா

Nov 27, 2021

21-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார்.

2019-ம் ஆண்டுக்குப்பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர உச்சிமாநாட்டில் இந்தியா, ரஷ்யா பாதுகாப்பு வெளியுறவுத்துறை மந்திரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடைபெற இருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையின்போது அவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ராணுவம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசப்படும். ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.