• Wed. Dec 11th, 2024

நடன மாஸ்டர் சிவசங்கருக்கு உதவிய தனுஷ்

Byமதி

Nov 27, 2021

சினிமா நடன இயக்குநர் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடன மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், சிவசங்கர் மனைவி மற்றும் அவரது மூத்த மகனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசங்கர் இளைய மகன் அஜய் கிருஷ்ணா தனது தந்தையின் மருத்துவ கட்டணங்களை கவனித்துக்கொள்கிறார்.

இருப்பினும் அவரது மேல் சிகிச்சைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து நடன இயக்குநர் சிவசங்கருக்கு நடிகர் சோணு சூட் நிதி உதவி அளித்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் சிவசங்கருக்கு, நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.