மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் உள்ள சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விழா நடந்தது. வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டு பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுந்தரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் மீனாட்சி அம்மனுக்கு சாந்தாபிஷேகம்செய்யப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு திரு உருவ அலங்கார அபிஷேகம் செய்த அன்னத்தால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய் திருந்தனர். அதே போல குட்லாடம் பட்டி கொட்ட மடக்கி கண்மாய் கரை கீழ்ப்பகுதியில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணா மலையார் தியான மண்டப கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அண்ணாமலை லிங்கேஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேக திருவுருவ அலங்காரம் செய்து செய்யப்பட்டது. அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதன் ஏற்பாடுகளை அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாகி கோபி நாத் செய்திருந்தார்.அதேபோல் குட்லாடம் பட்டி சிறுமலை அடிவாரத்தில் அஞ்சு குழி கண்மாய் சாலையில் லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் லலிதாம்பிகேஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து கண் திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனை அர்ச்சனைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாச்சல பாண்டியன் செய்தார்.





