• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

குற்றவாளியை துரத்தி பிடித்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

ByKalamegam Viswanathan

Feb 17, 2025

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த மதுரை பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
மதுரை மாவட்டம் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் தலைமை காவலர் செந்தில்பாண்டியன் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.