• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

தேனி மாவட்டம் கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வடக்கு போலீசார், இறந்த மூதாட்டி குறித்து விசாரித்தனர். மூதாட்டி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் அவரின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனம் குறித்து கேமரா பதிவு உள்ளிட்டவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.