• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம்

அலங்கார உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம் நடைபெற்றது. அலை கடல் போன்ற மக்கள் கூட்டம் தரிசனம் செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமம் ஒவ்வொன்றிலும் வான் தொடும் சிலுவை தாங்கிய தேவாலயங்கள் வரிசையில், கன்னியாகுமரியில் உள்ள 110_ ஆண்டுகள் பழமையான அலங்கார உபகார மாதா கோயிலின் 10_ நாள் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றம் இன்று மாலை (டிசம்பர்_6) பங்கு தந்தை அருட்பணி உபால்ட் தலைமையில், உதவி அருட்பணியாளர்கள், அருட் கன்னியர்கள், தேவாலயம் நிர்வாக குழு, ஊர் மக்கள் ஒன்று கூடி புனித அலங்கார உபகார மாதா கோயிலின் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

திருக்கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. எதிர் வரும் 15_ம்தேதி இரவு தேரோட்டத்தை தொடர்ந்து 16_ம்தேதி(10_ம்) திருவிழா காலையில் திருப்பலிக்கு பின் தங்கத் தேர் ஓட்டம் நடைபெறவுள்ளது.