• Mon. Jan 20th, 2025

காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை.

குமரி கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொடர்ந்து தேசத்தந்தை காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பழைய கட்டிடத்தில் பழமை வாய்ந்த காந்தி சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையை மாற்றக்கூடாது மீண்டும் புதிய கட்டிடத்தில் அந்த சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும்.

மேலும் இந்த சிலையை சுதந்திர போராட்ட வீரர் சிந்தனை சிற்பி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை திறந்து வைத்த கல்வெட்டு உள்ளது. காந்தி அடிகளின் சிலை அதே இடத்தில் வைக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர்,விஜய்வசந்த் எம். பி.உத்தரவின் பேரில் வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.சிவகுமார் கோரிக்கை.

பழைய கட்டிடத்தில் உள்ள காந்தி சிலையை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பேசி மீண்டும் அந்த சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என கேட்டு கொண்டதின் பேரில் அந்த சிலையை அதே இடத்தில் வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.