• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம்

ByP.Thangapandi

Nov 28, 2024

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம் வெறிச்சோடி காணப்படும் அலுவலகங்கள்

தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் அலுவலர்கள் தங்கள் பணியை புறக்கணித்து அலுவலக வாயிலிலேயே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கையுடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.