• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நடிகர் விவேக் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 19, 2021

1961 நவம்பர் 19ல் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தவர் விவேக்.இவரது இயற்பெயர் விவேகானந்தன். ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பி.காம்., பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே, முறைப்படி பரத நாட்டியம் பயின்றார்.

ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றினார்.கடந்த 1987ல் வெளியான, மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். சென்னை, தலைமைச் செயலகத்தில் பணி மாறுதல் கிடைத்தது.

துாள், சிவாஜி உட்பட,200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். மரம் நடுவதை இயக்கமாகவும் கடமையாகவும் மாற்றினார். 2021 ஏப்ரல் 17ல், தன் 59வது வயதில் காலமானார்.இப்படி தன் வசனத்தால் ஈர்த்த கலைஞன் விவேக் பிறந்த தினேம் இன்று!