அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு…….
ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கோரிக்கை…..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்த புறம்போக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 5,சென்ட் இடத்தில் ஒன்றை சென்ட் இடத்தை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசின் ஒப்புதலோடு கொடுத்துள்ளனர் இந்த நிலையில் மீதமுள்ள 3.1/2. செ என் டி ல் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென ஒன்று திரண்டனர்

மேலும் அப்பகுதியினர் கூறுகையில் அரசு புறம்போக்கு நிலம் 5 சென்ட் இருப்பதாகவும் அதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஒன்றரை சென்ட் வழங்கி இருப்பதாகவும் மீதமுள்ள இடத்தில் அரசு அலுவலகம் அல்லது பொது மக்களுக்கு பயன்படும் வகையிலான கட்டிடங்கள் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆகிருமித்து இருப்பதாகவும் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினர் மேலும் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனுக்களை கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.