• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் – கண்ணீர் சிந்திய சிம்பு

Byமதி

Nov 18, 2021

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மாநாடு’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும்
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ,பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய நடிகர் சிம்பு, ”ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க… ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என கண்ணீர்மல்க பேசினார். சில நிமிடம் அவர் மேடையிலேயே பேச முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் சூழ இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.