எம்ஜிஆர் என்ற மக்கள் சக்தி பெற்றவர் 53_ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அரசியல் கட்சி, இன்று வரையில் பல்வேறு வகையான எதிர்ப்புகள், பூகம்பம் என்ற எத்தகைய சூழலையும் சந்தித்தாலும், எல்லாவற்றிற்கு ஈடு கொடுத்து, இன்று ஆட்சி கட்டிலில் இல்லை என்றாலும் பிரதான எதிர் கட்சி என்ற அந்தஸ்தில் தொடர்கிறது.
இன்றைக்கு அதிமுக எதிர்கொள்ளும் தாக்குதல் ஒன்றிய மோடி அரசின் சதியுடன் கூடிய நிழல் யுத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது, சொந்த கட்சியினரால் ஏற்படும் வேதனைகள் என்ற நிலையில், அதிமுக அகவை 53_ ல் அடி எடுத்து வைக்கும் நாளை ( அக்டோபர்_17)ம் நாளில், தமிழகம் அளவிலும், குமரி மாவட்ட அளவிலும் அந்த கட்சியின் முகமாக இருந்தவர் சட்டம் படித்த தளவாய் சுந்தரம்.
ஜெயலலிதாவின் தனித்த அன்பை பெற்றவர் என்று எல்லோரும் சொல்லும் அந்த கட்சியில் தனித்த இடத்தில் இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும், ஒன்றிணைந்த குமரி மாவட்ட செயலாளராக இருந்த போதிலும், அம்மாவால் இரண்டு பதவிகளில் இருந்து நீக்கினாலும், மீண்டும் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்ற பதவிகளில் இவரை அம்மாவே அமர்த்தி அழகு பார்த்தார்.

தளவாய் சுந்தரம் ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக இருந்தாலும். குமரி மாவட்டத்தில் அனைத்து கட்சியினரை நேசிக்கும் மன நிலையை பெற்றிருந்த தளவாய் சுந்தரம். இவரிடம் உதவி நாடி சென்றவர்களை யார், யார் என்று வேறுபடுத்தி பார்க்காது அவர்களின் அப்போதைய இன்னலை தீர்த்து வைக்கும் மனித நேயராகவே இன்று வரை உள்ளார்.
அவர் சார்ந்திருக்கும் இயக்கம் 53_வது அகவை தினத்திலே, தளவாய் சுந்தரத்தின். 67_ வது அகவை தினமும் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை.!
அதிமுக வின் கடந்த அகவை தினத்தின் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தளவாய் சுந்தரம் இந்த ஆண்டு கட்சியின் அகவை தினத்தில் நேரடியாக பங்கேற்பாரா.? என்ற கேள்வி தொத்தி நிற்கிறது.
தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற மக்கள் பிரதிநிதி என்ற நிலையில். அதிமுகவில் தளவாய் சுந்தரத்தின் பாதச் சுவட்டில் பயணிப்போர் எல்லாம் தங்கள் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை வெளிப்படுத்தும் வகையில்.

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி யில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பெரிய, பெரிய சுவரொட்டிகளில், தளவாய் சுந்தரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது கடந்த காலத்தை விட கூடுதலாக இருப்பதாக பலரும் தெரிவித்தார்கள்.
பிறந்த நாட்கள் கொடுக்கும் மகிழ்ச்சி எதிர் காலத்தில் இயக்கத்திலும் தளவாய் சுந்தரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே அவரது விசுவாசிகளின் ஆசையாக உள்ளதை காண முடிகிறது. அதிமுகவில உள்ள மூத்த வயதினர் வெளிபடுத்திய மற்றொரு பார்வை.
விஜயதரணியை போன்ற அரசியல் தற்கொலை முடிவை தளவாய் சுந்தரம் ஒரு நாளும் எடுக்க மாட்டார் என்ற அவர்களது எண்ணத்தையும் பொது வெளியில் தெரிவித்தார்கள்.











