குமரியில் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விழாக்களில் ஒன்று வார்த்தை சித்தரின் நினைவை போற்றும் விழா நடைபெற்றது.
குமரி மாவட்டம் தக்கலை இலக்கிய வட்டத்தின் சார்பில், பத்திரிகையாளர் ஐ.கென்னடி எழுதிய ஜான் போஸ்கோ-வின் அத்தியாயம்.
தக்கலை இலக்கிய வட்டத்தை சேர்ந்த இருவர் நூல் விமர்சனம் செய்தனர். இதே விழாவில் தெலுங்கில் வெளியாகிய புத்தகத்தை பேராசிரியர் மாரியப்பன் தமிழில் மெழி பெயர்க்கப்பட்ட நூலும் விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இளம் எழுத்தாளரின் பற்றி எரியும் நரம்புகள் நூலும் பாராட்டப்பட்டது. ஒளி ஓவியரும் எழுத்தாளருமான ஜவஹர் ஜூ. நன்றி கூறினார்.
கன்னியாகுமரியில் நெய்தல் பதிப்பகத்தின் சார்பில், வெளியீட்டாளர் தினகர் கடந்த பல ஆண்டுகளாக வார்த்தை சித்தர் ஜானபாரதி என்ற பாராட்டுகளை பெற்ற வலம்புரி ஜான் எழுதிய மொத்தம் 80_க்கும் அதிகமான புத்தகங்களில் 50_க்கும் அதிகமான புத்தகங்களை பதிப்பித்துள்ளார். தினகர் கடந்த பல ஆண்டுகளாக வலம்புரி ஜானின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வரிசையில் 77_வது அகவை தினத்தில், வலம்புரி ஜானின் சொந்த ஊரான உவரியை சேர்ந்த படைப்பாளிகளில் ஒருவராவது, தினகர் நடத்தும் விழாவில் பங்கேற்க செய்வார்.
கன்னியாகுமரியில் நடந்த அகவை 77_வது தினத்தில். உவரியை சேர்ந்த சாகித்திய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஷ் பங்கேற்று வார்த்தை சித்தரோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்தார். வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த “தாய்” வார இதழின் ஓவியர் கங்கன் அவரது பேச்சில். பத்திரிகை பணி காலத்தில் இருவருக்கும் இருந்த அந்த நாட்களின் நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஊடக வியலாளர் தாகூர். ஊடகத்திற்காக வலம்புரி ஜான் உடனான நேர்முகம் சந்திப்பின் அனுபவத்தை பகிர்ந்தார்.
நிகழ்வில் எழுத்தாளரும், வழக்கறிஞருமான திருத்தமிழ் தேவனார்,குமரி அமுதன் ஆகியோர் உரையாற்றினார்கள். வலம்புரி ஜான் மிகவும் விரும்பி உட்க்கொள்ளும். அவித்த பனம் கிழங்கு பார்வையாளர்களுக்கு விருந்தாக கொடுக்கப்பட்டது.
தாய் பத்திரிகையில் ஓவியராக பணியாற்றிய கங்கன் வரைந்த வலம்புரி ஜானின் வண்ண ஓவியத்திற்கு பார்வையாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.