சுசீந்திரத்தை அடுத்த தேரூர் குறண்டியில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த
உபயதாரர்கள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், ஆய்வு மேற்கொண்டார். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோயில் ஊழியர் சுரேஷ், பூசாரி இசக்கியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.