• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

17 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Oct 4, 2024

தமிழகத்;தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் அக்டோபர் 3 ஆம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8 ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
நாளை (சனிக்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் ஆகிய 18 இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.