• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

Byமதி

Nov 16, 2021

பருவநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக, வருகிற 30ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முதலில் தேர்வு செய்வது மலை ரயில் தான். ஆனால், கடந்த 23ஆம் தேதி அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான மண் சரிவுகளால், ரயில் சேவை முடங்கியது. பல இடங்களில் ரயிலின் இருப்புப்பாதை புதைந்து போனது.

சீரமைப்புப்பணிகள் தொடங்கினாலும், மழை காரணமாக பல நேரங்களில் பணிகள் தடைபட்டது. மழை மற்றும் சீரற்ற சீதோஷ்ண நிலை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மலை ரயில் சேவை, வரும் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.